என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரி பலி"
- மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார்.
- விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி, செப்.23-
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் அல்லாபக்ஸ் (வயது 41). இவர் அதே பகுதியில் பீரோ, கட்டில் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரூபியாபானு (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரூபியாபானு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கம்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். மீண்டும் அவரை அழைத்துச் செல்வதற்காக அல்லாபக்ஸ் மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.***அல்லாபக்ஸ்.
- பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார்.
- எந்திரம் வெடித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு.
குளித்தலை:
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே கடவூர் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). பழைய இரும்பு வியாபாரி. நேற்று கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போல் கிராமங்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்து மதியம் குடும்பத்துடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
பின்னர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்கு சென்று பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது விவசாய பயிருக்கு மருந்து அடிக்கும் பழைய ஸ்பிரே எந்திரத்தில் இருக்கும் பித்தளை பொருட்களை எடுப்பதற்காக அதை சம்மட்டியால் அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக ஸ்பிரே எந்திரம் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் கிருஷ்ண மூர்த்தி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த வெடி சத்தம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. சம்பவத்தின்போது கிருஷ்ணமூர்தியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. கிருஷ்ணமூர்த் தியின் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது கிருஷ்ண மூர்த்தி உடல் சிதறி இறந்து கிடந்ததை கண்டு அசிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் கிடைத்த கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குசென்று பழைய இரும்பு பொருட்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி. செந்தில் குமார், தோகை மலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீ சார், கிருஷ்ண மூர்த்தியின் உட லைகைபற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். எந்திரம் வெடித்ததற்கான காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது.
காற்றழுத்தம் காரணமா? அல்லது அதில் வெடி பொருட்கள் இருந்ததா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரத்தின் ஸ்ப்ரே மோட்டாரில் ஆயில் பெட்ரோல் இருந்துள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகளை வரவழைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பலி யான கிருஷ்ண மூர்த்திக்கு மல்லேஸ்வரி (44) என்ற மனைவியும், ஜெயக்குமார் (22), சிவமுருகன் (12) ஆகிய 2 மகன்களும் செல்வி (17) என்ற மகளும் உள்ளனர். ஸ்பிரே எந்திரம் வெடித்து வியாபாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பணத்தை வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.
- வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது
இரணியல் :
மதுரை மாவட்டம் முனிச்சாலை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோராராம் (வயது43). ராஜ ஸ்தானை சேர்ந்த இவர் மதுரையில் சில்வர் பாத்தி ரங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஜெனாராம் (41). ஜெனாராம் அண்ணின் கம்பெனியில் உதவியாக இருந்து வந்தார். கணக்கு வழக்குகள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்கப்படும் பாத்திரங்களுக்கான பணத்தை வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக தக்கலை செல்ல நாகர்கோவிலில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். வில்லு க்குறி தாண்டி காரவிளையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜனாராம் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனாராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து அவரது சகோதரர் ஜோராராம் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் பஸ்- கார் மோதல்; எண்ணை வியாபாரி பலியானார்.
- தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது53), எண்ணை வியாபாரியான இவர் பல்வேறு ஊர்களுக்கு காரில் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசன் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்ய காரில் புறப்பட்டார்.
சிவகாசி-ஸ்ரீவில்லி புத்தூர் ரோட்டில் ஹவுசிங ்போர்டு காலனி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கணேசன் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது 54). மரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார். பின்னர் தோட்டப்பா டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வி. கிருஷ்ணாபுரம் பால் சொசைட்டி அருகே வேப்பூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறமாக வடமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வடமலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் வடமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள தட்டான்ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 42). மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் மீன் வாங்குவதற்காக புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். புவனகிரியை அடுத்த சியப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த செல்லதுரை மீது வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).
மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் வரதராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜேடர்பாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல்-பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேந்திரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
- பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.
ஓசூர்,
தேன்கனிக்கோட்டை தாலுகா காருகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 28). காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இவர் கடந்த 18-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பாகலூர்-மாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 37). முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டி பாளையத்திற்கு சென்றார் . அங்கு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த காத்தவராயனை ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நாகராஜ் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
- வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது67).
மெத்தை வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி வேல்முருகன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வரும் மகள் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்தார்.
பரமேஸ்வரி வீட்டின் பக்கத்து பிளாக்கில் உள்ள வீட்டில் வசித்து வரும் நாராயணன் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜிடம் மெத்தை ஒன்று விலைக்கு வாங்கினார்.ஆனால் அந்த மெத்தை அளவு சரியாக இல்லை என்று தெரிகிறது. மேலும் அதனை சரி செய்து தரும்படி அவர் நாகராஜிடம் கூறினார்.
இதையடுத்து நாகராஜ் 3-வது மாடியின் ஜன்னல் பக்கவாட்டு சுவரில் ஏறி நின்றபடியே அருகில் 2-வது தளத்தில் உள்ள நாராயணன் வீட்டில் இருந்து மெத்தையை கயிறு கட்டி இறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நாகராஜ் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜசேகர்,சக்திவேல் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்
- பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விழுப்புரம்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் (45). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் - புதுவை 4 வழிச்சாலையில் காட்ராம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களுக்கு முன்னால் சவுக்கு கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எடை போடுவதற்காக எடைமேடைக்கு திரும்பியது. இதனை எதிர்பாராத சக்திவேல் நிலைதடுமாறி, மோட்டார் சைக்கிளுடன் லாரி மீது மோதினார்.
விபத்தில் ராஜசேகர், சக்திவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், பலத்த காயமடைந்த சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் இன்ஸ்பெ க்டர் பாலமுரளி மற்றும் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
- தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாடிக்கொம்பு:
நிலக்கோட்டை அருகே சத்திரம் தெருவை சேர்ந்தவர் பத்திரிநாராயணன் (42). இவர் சோப்பு வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது சின்னாளபட்டி கோட்டைபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலையில் படுகாயமடைந்த பத்திரி நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்